Categories
மாநில செய்திகள்

முஸ்லிம்களே இல்லாத ஊர்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. நெல்லையில் அதிசயம்….!!!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். வருடம் தோறும் ஆடி மாதம் 16ஆம் தேதி மேகப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடுவது வழக்கமாகும். ஆனால் இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆதி மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

கந்தூரி விழாவை இந்த ஊரில் உள்ள இந்துக்களே  நடத்தி வருகின்றனர். விழாவிற்காக கேரளா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் விஜயநாராயணத்திற்கு வருவது வழக்கமாகும். முற்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இந்துக்களும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள். அதன் பின் ஏற்பட்ட பிரச்சனையினால் ஆடி மாதம் 16ஆம் தேதி மேத்த பிள்ளை என்ற முஸ்லிம் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவி புரிய வந்த பாளையங்கோட்டை பட்டாணி சாஹிப்பும் உயிரிழந்ததாகவும் அவர்கள் இருவர் நினைவாக தர்கா எழுப்பப்பட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த வருடமும் ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர். கிராமத்தில் உள்ள இந்துக்கள் தங்கள் வீட்டு விழா போன்று ஒன்று கூடி திருவிழாவை நடத்தினர். மேலும் விழாவிற்கு முஸ்லிம்களை விருந்தாளிகளாக தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரணைகளும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இங்குள்ள பல இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்காவின் பெயரிலே மேத்த பாண்டியன், மேத்தா என பெயர் சூட்டி இருக்கின்றனர். இவ்வாறு கொண்டாடப்படும் இந்த கந்தூரி விழா மதநல்லினத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

Categories

Tech |