நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசம் காப்போம் என்ற முழக்கத்தில் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.இதில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு , தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பேசிய திருமாவளவன் , நாங்கள் முஸ்லீம்கள் இல்லை இருந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம் என்றால் நாட்டின் ஜனநாயக சக்திகள். இந்து மத கொள்கை மீது பற்று கொண்ட காந்தியையே கோட்சே சுட்டுக் கொன்றான் என்றால் ஆர்எஸ்எஸ்சை அமைப்பை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ்சின் அரசியல் அணிதான் பிஜேபி. முஸ்லீம்களை தனிமைப்படுத்த நாங்கள் விடமாட்டோம் என அவர் கூறினார் .