எஸ். டி .பி.ஐ கட்சி சார்பில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் பேகம்பூரில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் எஸ். டி .பி.ஐ கட்சி சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தபால் அட்டை மூலம் கடிதம் அனுப்பும் போராட்டத்தை நேற்று நடத்தினர் . இதில் ஏராளமான மக்கள் தபால் மூலம் கடிதம் எழுதி அதில் கையொப்பமிட்டு உள்ளார்கள். இந்த கடிதத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தபால்கள் அட்டையில் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி எழுதப்பட்ட இந்த கடிதங்கள் அனைத்தும் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அனுப்பப்பட உள்ளது.