Categories
உலக செய்திகள்

முஸ்லிம் கணவரால் மகள் விற்பனை என அச்சம்…. சுப்ரீம் கோர்ட்டை நாடிய கிறிஸ்தவ குடும்பம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் கிறிஸ்தவரான கில் என்பவர் டெய்லர் தொழில் செய்து வருகின்றார். இவரது மகள் நயப் கில். இவரை சதாம் ஹயத் என்ற முஸ்லிம் வாலிபர் மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தற்போது ஹயத்துடன் ஒன்றாக நயப் வசிக்கவில்லை என கூறப்படுகின்றது. இது பற்றி அறிந்த நயப்பின் தந்தை கில் அச்சமடைந்துள்ளார். தங்களது மகளின் பாதுகாப்பு குறித்து கில்லும், அவரது மனைவியும் முன்பிருந்தே வேதனைப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நயப் தன்னுடன் இல்லை என கணவர் கூறியது கேட்டு கில்லின் அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து கில் காவல்துறையினரிடம் கூறியதாவது, “தனது மகளை ஹசன் விற்றிருக்க கூடும் அல்லது கொன்றிருக்க கூடும். என்றும் எங்களது மகள் பாதுகாப்புடன் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு தெரிய  வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டை அவர் நாடியுள்ளார்.

அவரது வழக்கை ஓராண்டாக கோர்ட்டு எடுக்காமல் இருந்தது. இது குறித்து கில்லின் வழக்கறிஞர் மலூக் கூறியதாவது, எங்களது 14 வயது மகள் நயப்பின் மீட்புக்கான எங்களுடைய மனுவை நீதிபதி முகமது அம்ஜத் ரபீக் ஏற்று கொண்டுள்ளார். சிறுமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி குஜ்ரன்வாலா காவல் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்” அவர் என கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் ஆண்டுதோறும் 1,000 சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். அவர்களில் 70% பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்களுடைய மத அடையாளத்திலிருந்து கட்டாயத்தின்பேரில் மாற்றப்பட்டு, பின்னர் திருமணம் செய்யப்படுகின்றனர். மேலும்  சில சமயங்களில் விற்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளன.

Categories

Tech |