முஸ்லிம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என சாமியார் ஒருவர் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சாமியார் முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நரசிங்கானந்த் என்ற சாமியார் கலந்து கொண்டார். இவர் முஸ்லிம் பெண்களை இன்பபடுகொலை செய்ய வேண்டும் எனக் கூறினார். இதை பொதுமக்கள், ராணுவம், காவல்துறையினர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதன் காரணமாக நரசிங்கானந்த் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சித்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற இடத்தில் இருக்கும் ஒரு மசூதியின் முன்பாக பஜ்ரங் முனி என்ற சாமியார் ஒலிபெருக்கியில் பேசினார். இவருடன் ஒரு காவலரும் உடன் இருந்தார்.
இந்த சாமியார் மதரீதியான கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சையான விமர்சனங்களை பேசினார். இவர் இந்து பெண்களுக்கு முஸ்லிம்கள் ஏதேனும் தீங்கு செய்தால் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் கைதட்டி ரசித்தனர். இந்த வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இணை நிறுவனர் கூறுகையில் இந்த வீடியோ ஏப்ரல் 12-ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து சித்தாபூர் காவல்துறையினர் மூத்த காவல் அதிகாரி ஒருவர் இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்து வருகிறார் என கூறியுள்ளார். மேலும் இந்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை அமைப்பு, தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றுக்கும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வருகிறது.