Categories
உலக செய்திகள்

முஸ்லீம் அமைப்பிற்கு தடை… அதிரடியாக அறிவித்த நாடு… இது தான் காரணமா..?

முஸ்லீம் அமைப்பிற்கு திடீரென திவீரவாதத்தை ஆதரிப்பதாக ஜெர்மனி தடை விதித்திருக்கிறது. 

தவ்ஹீத் பெர்லின் என அழைக்கப்பட்டு வரும் “Jihadist-Salafist” அமைப்பான Jama’atu Berlin என்ற முஸ்லிம் அமைப்பை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக twitter பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது பெர்லின் மற்றும் Brandenburg போலீஸ் அதிகாலை ஜமாத்தின் பெல்லின் குழுவை சேர்ந்தவர்களின் பகுதியில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

இதில் Reinickendof, Moabit, Wedding, Neukolin போன்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கமாண்டோக்கள் உள்ளிட்ட 800 காவல்துறையினர் ஈடுபட்டனர். இதில் யாரையும் உடனடியாக கைது செய்யவில்லை. இந்தத்தொடர் சோதனைகளுக்கு பின் Jama’atu Berelin தடை செய்வதாக பெர்லின் செனட் தெரிவித்துள்ளது.

ஜமாத் பெர்லின் ஐ.எஸ்.ஐ யை புகழ்ந்தும் முஸ்லிம் இல்லாத மற்றவர்களை கொலை செய்யப்படுவதற்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தீவிர யூத-விரோதி என்று செனட் உள்துறை செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் இந்த அமைப்பில் 20 உறுப்பினர்கள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும் சிலர் பெர்லினின் பகுதிகள் சிலவற்றில் கடந்த காலங்களில் துண்டுப்பிரசுரங்களை அளித்து கவனம் ஈர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |