Categories
அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா கிடையாது… வெளியான பரிசோதனை முடிவு…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவுவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பியுள்ளார். மேலும் அக்காட்சி எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அண்ணா அறிவாலயம் வந்திருந்தபோது அவரை வரவேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நேற்று அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று குழுவினர் பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.அதன் பிறகு வெளியான பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |