முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வராக்க பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.