Categories
தேசிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் இதை “இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்”…. கோரிக்கை விடுத்த விஜயகாந்த்….!!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிஜிபி சைலேந்திரபாபு  காரில் சிலிண்டர் வெடித்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கில் இதுவரை 4  பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உபா  சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து  முதல் அமைச்சர் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. தற்போது வழிப்பறி, கொலை, கொள்ளை, போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமை என  நாடு சீரழிந்து வருகிறது. தற்போது நடைபெற்றுள்ள சிலிண்டர் வெடிப்பு சம்பவதால்  மக்கள்  அதிர்ச்சியில் உள்ளனர்.  ஏற்கனவே பெட்ரோல் கொண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முழு கவனம் செலுத்த வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக உரிய  விசாரணை நடத்தி இது தீவிரவாத செயலா என்பதை கண்டறிந்து தமிழகத்தில் தீவிரவாத கலாசாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க  வேண்டும். மேலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி மக்களுக்கும்  அச்சுறுத்துதல் இல்லாத வகையில் தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |