திண்டுக்கல்லில் கனிமொழி எம்.பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கனிமொழி எம் பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி கனவில் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. முதலமைச்சராக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட முடியும். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த பத்து வருடங்களாக மின்சாரத் துறையில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.