முகநூல் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி முகநூல் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கொத்தனாரான மனோகர் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனோகரன் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனோகரன் சிறுமியை விழுப்புரம் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் ராமநாதபுரம் அழைத்து வந்து மனோகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.