Categories
உலக செய்திகள்

மூக்கின் வழியாக நுழைந்து…. மூளையை பாதிக்கும் கொரோனா…. ஆய்வில் கண்டுபிடிப்பு…!!

கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக நுழைந்து மூளையை பாதிக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசானது மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டும் பாதிப்பதோடு, மட்டுமல்லாமல் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியான 33 பேருடைய மூளை மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் 22 ஆண்கள், 11 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் மூக்கு வழியாக சென்று மூளைக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மூளையில் காணப்படும் திரவங்களில் கொரோனா வைரசின் மரபணுக்கூறுகள் ஒட்டிக் கொண்டிருந்தது தென்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெருமூளையின் தண்டு வட நீரிலும் கொரோனா வைரஸ் மரபணுக்கள் காணப்பட்டுள்ளன.

எனவே இந்த ஆய்வின் மூலம் கொரோனா வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மனிதனை கொரோனா வைரஸ் தாக்கினால், அது மூளை பகுதிக்குள் செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே மூளையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வு நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உறுதியான ஆய்வறிக்கையை Nature Nuro Science என்ற அறிவியல் ஆய்வு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |