நடிகை நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் மூக்குத்தி அம்மன் பட ரெய்லரை தெலுங்கு பட நடிகரான மகேஷ் பாபு வெளியிட உள்ளார்.
பிரபல லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மூக்குத்தி அம்மன் ஆகும். இந்த படத்தின் திரைக்கதை ,கதை ,வசனம் எழுதி ஆர்.ஜே. பாலாஜி இயக்குனர் சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படமானது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்த இந்த வருகின்ற தீபாவளி பண்டிகை அன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றது.
இந்தப் படத்தின் டிரைலர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நாளை வெளியாக இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லரை வெளியிடுபவர் யார் என்பதனை ஆர். ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு பட நடிகரான மகேஷ் பாபு இந்த ட்ரெய்லரை வெளியிட இருக்கின்றார். தமிழ் பட டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் நடுவே ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.