ஆயிரம் விளக்கு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா அம்மா நினைவிடத்திற்கு சென்றது அரசியல் நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று முதல்வர் முக ஸ்டாலின் சொல்லுகிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உதயநிதி அவர்களே 5 மாதத்தில் இவ்வளவு சேவைகளை நாங்கள் மக்களுக்காக செய்திருக்கிறோம் என்று சொல்லி ஏன் களத்தில் இறங்கி வாக்கு கேட்க வில்லை? அதற்கு பதில் இருக்கிறதா?
மக்களை சந்திப்பதற்கு முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பயம் இருக்கிறது. 5 மாதங்களில் கிடைத்த சாதனை என்று சொன்னால் அந்த சாதனையை சொல்லி மக்களிடம் ஏன் வாக்கு கேட்கவில்லை. ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு மூக்குத்தி, தோடு, 20 கிலோ அரிசி, பட்டு புடவை, 1000 ரூபாய் எல்லாம் கொடுத்தீர்களா? இல்லையா? இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு வெற்றி என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இது உண்மையான வெற்றி கிடையாது பொய் வெற்றி.