ஒரே நாளில் ஒரு தம்பதி கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியாவில் மைக்கேல் ஸ்ட்ரேஞ் – ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்பதை மைக்கேல் பார்த்துள்ளார். இவர் முதலில் மூக்கு கண்ணாடி அணியாமல் லாட்டரி சீட்டை பார்த்தபோது இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக நினைத்துள்ளார். இவர் மிகவும் சிறிய தொகை தான் பரிசாக கிடைத்துள்ளது என நினைத்துள்ளார்.
அதன் பிறகு மைக்கேல் தன்னுடைய மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு லாட்டரி சீட்டை பார்க்கும் போதுதான் அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது மூக்கு கண்ணாடி அணியாமல் பார்க்கும் போது சில சைவர்கள் அவருடைய கண்ணுக்கு தெரியவில்லை. மேலும் மூக்கு கண்ணாடியை அணிந்த பிறகு தான் 1 மில்லியன் டாலர் பரிசாக விழுந்துள்ளது எனவும் தெரியவந்தது. இதன் காரணமாக ஒரே நாளில் தம்பதியினர் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டனர்.