நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சிறார்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதி கட்ட சோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த டோஸ் முதல் 2 டோஸ் செலுத்திய நபர்களுக்கு மூன்றாவதாக மூக்கு வழியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.