Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழியே கொரோனா தடுப்பூசி… விரைவில் மனிதர்களுக்கு…. முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்….!!!

சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மூன்றாவது டோஸ்  தடுப்பூசிக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். தற்போது கொரோனோவிற்கு  தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் தற்போது போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு டோஸை  போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூக்கு வழியே  கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் சிறப்பானதாக இருந்தாலும் அது  அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால்தான் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து உருவாக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை நடந்த ஆய்வில் நல்ல பலன் கிடைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் கோவிஷில்டு   தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின்  மூக்கு வழியே செலுத்தும்  மருந்தின் மூன்றாவது சோதனைக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. மேலும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த மருந்து பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

Categories

Tech |