உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணமாக்கும் மருதப்பட்டை டீயை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மிகவும் சிறந்தது.
அதன்படி மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதன் இலை, பட்டை, பழம் மற்றும் விதை அனைத்தும் பயன் தருபவை. அதன் பட்டையை கசாயம் வைத்து குடித்து வந்தால் எந்த நோயும் வராது. அதிலும் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை குணமாக்குவதற்கு இது மிகவும் சிறந்தது.
தேவையான பொருட்கள்:
மருதம் பட்டை பவுடர்-4 கிராம்.
டீத்தூள்-சிறிதளவு.
தண்ணீர்-350 மிலி
வெல்லம் அல்லது கருப்பட்டி தேவையான அளவு
பசும்பால்- 40 மில்லி.
செய்முறை:
பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு 100 மில்லி அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம் மற்றும் பால் சேர்த்து வடிகட்டி குடிக்க வேண்டும். மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.
மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது. அதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். மாரடைப்பு பிரச்சனையை 50% வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சனையை சரிசெய்யும். இதனை தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் எந்த நோயும் பக்கத்தில் வராது. ஆனால் ஆண்டு முழுவதும் இதனை பருகக்கூடாது. இரண்டரை மாதம் குடித்து விட்டு சிறிது இடைவெளி விட்டு அதன் பிறகு குடிக்கலாம்.