மறைந்த பாடகர் எஸ்.பி.பி க்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பாரதி யுவகேந்திரா இணைந்து மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பேசிய அமைச்சர் வரலாற்றிலேயே இசையாலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.பி என்றார். அவரது மூச்சு நின்ற பிறகும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் எஸ்.பி.பி என புகழாரம் சூட்டியுள்ளார்.
Categories