Categories
தேசிய செய்திகள்

மூடநம்பிக்கைகளின் உச்சம்… மழையை வர வைக்க…. சிறுமிகளை நிர்வாணமாக அழைத்துச்சென்ற ஊர் மக்கள்….!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக தவளை மாலையுடன் ஊர்வலம் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில புதல்கண்ட் என்ற கிராமத்தில் மழை வேண்டும் என்பதற்காக சிறுமிகளை நிர்வாணமாக வைத்து அவர்களின் கழுத்தில் தவளையை மாலையாக கட்டி போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். புதல்கண்ட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்த சடங்கிற்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த கிராமத்தில் மழையின்றி வறட்சி ஏற்பட்டு உள்ள காரணத்தினால், மழை கடவுளை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற சடங்குகளை அந்த ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

நிர்வாணமாக உள்ள சிறுமிகள் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலும் உணவு தானியங்களை சேகரித்தனர். பின்னர் உள்ளூர் கோவிலின் சமுதாயக் சமையலறைக்கு அதனை நன்கொடையாக வழங்கினார். இந்த சடங்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் நடப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |