Categories
தேசிய செய்திகள்

மூடநம்பிக்கை…. உச்சக்கட்ட கொடூரம்….. குழந்தையை அடித்தே கொன்ற யூடியூப் தம்பதி….!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகரை சேர்ந்த சித்தார்த் சிம்னி மற்றும் ரஞ்சனா தம்பதிக்கு 16 வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் சித்தார்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் கடந்த மாதம் தஹல்கட் பகுதியில் உள்ள தற்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அவர் ஐந்து வயதான தனது இரண்டாவது மகளின் நடவடிக்கைகள் மாறியதாக மூடநம்பிக்கை கொண்டுள்ளார்.

அதாவது தனது மகளுக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்து மூடநம்பிக்கையின் மிகுதியில் தனது மனைவி ரஞ்சனா மற்றும் உறவினர் பிரிய ஆகியோருடன் இணைந்து தன் மகளுக்கு பேய் ஓட்டுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாந்திரீகம் செய்துள்ளார். பேய் ஓட்டுவதாக நினைத்து மாந்திரீகம் மற்றும் பூஜை செய்தபோது அந்த ஐந்து வயது குழந்தையிடம் பெற்றோர் கேள்விகளை கேட்டுள்ளனர்.

ஆனால் பயத்தில் சிறுமி அழுது கொண்டே பதில் அளிக்காமல் இருந்ததால் சிறுமியை பெற்றோர் கடுமையாக அடித்தனர். அதனால் உடலிலும் கன்னத்திலும் கடுமையாக அடித்து அதனை வீடியோவும் எடுத்தனர். இதனால் குழந்தை உடனே மயங்கி விழுந்தது. பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை அதிகாலை தர்காவுக்கு சென்றனர்.

அதன் பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதித்த விட்டு உடனடியாக அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர் பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |