Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட தூதரகம்…. மீண்டும் செயல்படத் தொடங்கியது…. பிரபல நாட்டில் அறிவிப்பு…!!

உக்ரைனில் கிவ் நகரத்திற்குள் தென் கொரியா தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டில் போர் காரணமாக மூடப்பட்ட தென் கொரிய தூதரகம் உக்ரைனின் கீவ் நகரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் நகரத்திற்கு திரும்பியுள்ளனர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக தென் கொரியா கடந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் கீவ் நகரத்தில் இருந்து தூதரகத்தை காலி செய்துள்ளது. மேலும், உக்ரேனில் உள்ள நகரங்களான லிவிவ் மற்றும் செர்னிவ்சியில் இரண்டு தற்காலிக தொடர்பு அலுவலகங்களையும், அண்டை நாடான ரோமானியாவில் ஒன்றையும் தென் கொரியா நிறுவியுள்ளது.

இதனை அடுத்து நேற்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தென்கொரியா உக்ரைனில் உள்ள தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்காக உக்ரேனிய அரசாங்கத்துடன் நெருக்கமான நட்புறவை விரும்புகிறது. மேலும் உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் நகருக்கு திரும்பியுள்ளனர். இந்த தூதரகத்தின் மற்ற ஊழியர்கள் இன்னும் செர்னிவ்சி மற்றும் ருமேனியாவில் உள்ளனர். மேலும் இந்த நிலைமையைப் பொறுத்து, அவர்கள் படிப்படியாக கீவுக்கு திரும்புவார்கள்” என்று கூறப்பட்டுள்ளனர்.

Categories

Tech |