Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட பள்ளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்கள்… “ஒரே பள்ளியில் 751 குழந்தைகள் புதைப்பு”… அதிர வைத்த சம்பவம்…!!!

கனடா நாட்டில் இனவெறி காரணமாக புதைக்கப்பட்ட பழங்குடியினரும் குழந்தைகளின் உடல்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப்பள்ளி மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1950களில் 500 மாணவர்கள் இருந்தனர். கனடாவின் உறைவிட பள்ளிகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடத்திய கட்டாய உறைவிடப் பள்ளிகளாக இது இருந்தது.

சுமார் 1863 முதல் 1998 வரை, 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு இந்த பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் மொழியைப் பேசவோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை, மேலும் பலர் தவறாக நடத்தப்பட்டுள்ளனர். 1978 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் உறைவிட பள்ளி மூடப்பட்டது.

இந்த நிலையில் மூடப்பட்ட இந்த பள்ளியில் கடந்த மாதம் 215 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுது. இவர்கள் அனைவரும் பூர்வ குடியின குழந்தைகள் என்பதும், பெரும்பாலானோர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தனர்? எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து சரியான தகவல் இல்லை. இந்தநிலையில் அங்கு இன்று 751 சடலங்கல் மீட்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |