மூட்டு வலி என்பது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண கால் வலியில் தொடங்கி கால போக்கில் மூட்டு வழியாகி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
பெரிதும் வயதானவர்களே அதிகம் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகளின் தேய்மானமே மூட்டு வழியை உண்டாக்குகிறது. மூட்டு வலி இரண்டு வகைப்படும் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று முடக்குவாதம்.
முடக்குவாதம் விரல்கள், கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலேயே பாதிப்புகளை உண்டாக்கும். இதே மூட்டழற்சி அதிகமாக வேலை செய்தாலோ, வெகு தூரம் நடந்தாலோ பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆகையால் மருத்துவரை அணுகி குணப்படுத்தி கொள்வது சிறந்தது.