உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் முடக்கத்தான் கீரையை எவ்வாறு சமைத்து சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்.
முடக்கத்தான் கீரை தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், மூட்டுவலி, மூலம் , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தவல்லது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக முடக்கத்தான் செயல்படுகிறது. இந்த முடக்கத்தான் கீரையை மைய அரைத்து குழந்தை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்துகிறது. இதனை எவ்வாறு சமைக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை – ஒரு கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
வரமிளகாய் – 2
உப்பு – சுவைக்கேற்ப
அரிசி மாவு – 1 கப்
தோசை மாவு – தேவையான அளவு
செய்முறை:
முடக்கத்தான் கீரை, சீரகம், வர மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் அரிசி மாவு, தோசை மாவு, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கரைத்து அரைமணி நேரம் விட்டுவைக்கவும். தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு குறைந்த தீயில் தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தோசையை தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.