ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முரசொலி கட்டுரையில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று கடும் விமர்சித்து வெளியிடப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே, உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் அஞ்சும் தெனாலி திரைப்பட கதாநாயகன் போல நிழலுக்கு அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள்.
சீரியலிலும் சினிமாவிலும் அழித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா மைக் மேனியாவா இல்லை எங்களுக்கா உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாகவும் இல்லை கேமரா மேனியாகவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதை விட உங்களுக்கு தான் மோடி போவியா. எனவே எந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னை பற்றி கட்டுரை வருகின்றது என ஆளுநர் கடுமையாக விமர்சித்துள்ளார்.