Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூட்டை மூட்டையாக சிக்கிய அரிசி…. 13 டன் பறிமுதல்…. உரிமையாளருக்கு வலைவீச்சு….!!

அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது குருவிபொட்டல் பகுதியில் வசித்து வரும் பாண்டி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்ததில் சுமார் 12,500 கிலோ அரைத்த குருணை ரேஷன் அரிசியும், 300 கிலோ ரேஷன் அரிசியும் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் முதுகுளத்தூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அரிசியை பதுக்கி வைத்த உரிமையாளர் பாண்டியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |