கர்நாடக மாநிலம், துமகூறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இளைஞரான இவர் சினிமா படங்களை பார்த்து அந்த கதாபாத்திரத்தை போன்றே தன்னை பாவித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அருந்ததி படத்தை தொடர்ச்சியாக 5 முறைப் பார்த்த அவர் அனுஷ்கா உயிரிழந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருவதை உண்மை என நம்பியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது தந்தை கண்முன்னே ‘நான் மறுபிறவி எடுப்பேன்’ என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் ரேணுகா பிரசாத் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.