சென்னையில் மீன் மார்க்கெட்டில் மகனின் நண்பன் என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த தாண்டவராயன் பகுதியில் வீரசின்னம்மாள் (65) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த 15ஆம் தேதி மீன் மார்க்கெட்டிற்கு சென்றபோது திடீரென ஒரு இளைஞன் தன்னை வீரசின்னம்மாளிடம் நான் உங்கள் மகன் போஸின் நெருங்கிய நண்பன் என்று கூறி பேசியுள்ளார். பாட்டியும் அவரிடம் நன்றாக பேசி கொண்டிருந்த போது அந்த இளைஞன் தனது மைத்துனனுக்கு திருமணம் என்றும் அதற்காக தாலிச் செயின் வாங்க வேண்டும் என்றும் உங்களின் தாலிச் செயினை போன்று புதியதாக செய்ய வேண்டும் என்று கூறி பாட்டியை நகை செய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்றான்.
அதன்பிறகு அங்கு நிறைய கூட்டம் இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பதால் நீங்கள் இங்கேயே இருங்கள் நான் செயினை காட்டிவிட்டு உடனே வந்து விடுகிறேன் என்று கூறி அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.மேலும் பாட்டி சிறிது நேரம் ஆகியும் அவன் வரவில்லை என்பதால் தான் நன்றாக ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த பாட்டி உடனடியாக வீட்டிற்குச் சென்று குடும்பத்தாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் இதனைப்பற்றி காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது மீன் மார்க்கெட்டில் இருந்து வண்டியில் பாட்டியை அழைத்துச் சென்ற வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இளைஞன் வீரசின்னம்மாள் அழைத்துச்செல்ல பயன்படுத்திய பைக் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது அந்த இளைஞன் எப்பொழுதும் மூதாட்டிகளை மட்டுமே குறிவைத்து ஏமாற்ற நகை பறித்து வருவது தெரியவந்தது. அவன் சிவா என்கிற சிவகுமார் என்றும் இவன் சென்னை கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தத் நகை திருட்டு இளைஞன் வீரசின்னம்மாளை போலவே இன்னும் இரண்டு மூதாட்டிகளையும் கோடம்பாக்கம் வடபழனி அரும்பாக்கம் நுங்கம்பாக்கம் சித்தாலப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் நகை பறித்து ஏமாற்றி புகார்கள் நிலுவையில் உள்ளது. மேலும் சிவாவிடமிருந்து வீரச்சினம்மாள் நகை உட்பட சுமார் 16 சவரன் நகைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.