Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. மகனின் பரபரப்பு புகார்…!!

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் எண்ணூரில் 60 வயதுடைய ஆண்டாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் புரை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூதாட்டியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் தனது தாய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக மூதாட்டியின் மகனான தாமோதரன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கை வந்த பிறகு தான் மூதாட்டி இறந்ததற்கான உண்மையான காரணம்  தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |