Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூதாட்டிக்கு தைலம் தேய்த்த பெண்” பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அய்யாவு நகர் பகுதியில் பெத்தம்மா(90) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் உங்களது உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடவா என அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு தைலம் தேய்த்துள்ளார்.

இதனை அடுத்து போலியான சங்கிலியை மூதாட்டியின் கழுத்தில் மாட்டிவிட்டு 3 பவுன் தங்க சங்கிலியை அந்த பெண் எடுத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் அணிந்திருப்பது போலியான நகை என்பதை அறிந்த மூதாட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |