Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. வசமாக சிக்கிய நபர்…. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்…!!

மூதாட்டியிடம் வழிபறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் மர்ம நபர் ஒருவர் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து காளியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காளியம்மாளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குமாரசாமி நகரில் வசித்து வரும் நயினார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நயினாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |