Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மூதாட்டியிடம் நடித்த மர்மநபர்… நுதன முறையில் நகை பறிப்பு… போலீசார் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் நுதன முறையில் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பழங்குளம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்னால் உள்ள மரத்தின் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து மூதாட்டியும் தண்ணீர் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி அணிருந்திருந்த சங்கிலி நன்றாக உள்ளது என்றும், இதோபோல் நானும் வாங்க உள்ளதாக கூறி அந்த சங்கிலியை பார்பதற்க்காக கேட்டுள்ளார்.

இதனை நம்பிய மூதாட்டியும் கழுத்தில் அணிந்திருந்த 1 1/2 பவுன் தங்க சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்டு பார்ப்பது போல் நடித்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |