மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகரில் உள்ள இந்திராநகரை சேர்ந்த பீட்டர் என்பவருடைய மனைவி எலிசபெத். இவர் அந்த பகுதியில் மாலையில் நடந்து கொண்டிருந்தபொழுது 2 பேர் அவரை வழிமறித்து போலீஸ் என அறிமுகம் செய்துகொண்டு எலிசபெத்திடம் இவ்வளவு நகைகளைப் போட்டுக்கொண்டு ஏன் வெளியே வருகிறீர்கள்? திருடர்கள் பார்த்தால் பறித்துச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளனர்.
அதன் பிறகு அவரிடம் இருந்த 4 3/4 பவுன் நகைகளை கழட்டி வாங்கி மூதாட்டியின் பர்ஸில் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூதாட்டி வீட்டிற்கு சென்றவுடன் நகையை பீரோவில் வைப்பதற்காக பர்ஸ்சை திறந்தபோது பர்ஸில் நகை இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த எலிசபெத் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றார்கள்.