Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு… “12 மணி நேரத்தில் சிக்கிய திருடர்கள்”… போலீசார் அதிரடி…!!

கோவை மாவட்டம் காரமடையில் வயது  முதிர்ந்த  பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை  12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர் .

கோவை மாவட்டத்திலுள்ள காரமடை அருகே  இருக்கும்  ஜே .ஜே .நகர் பகுதியில் சுலோச்சனா என்ற  73  வயதான பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை காரமடையில் உள்ள ரயில் நிலையத்தின் மேம்பால கீழ்ப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுலோச்சனாவை பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காரமடை காவல் ஆய்வாளர்   குமார்  குற்றவாளிகளை பிடிக்க  தனிப்படை அமைத்தார்.

இதனிடையே  திருட்டு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நகைகள் திருடப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. அந்த காட்சிகளை கொண்டு நகை திருடிய 2 நபர்களை போலிஸார் பிடித்து விசாரித்து கைது செய்துள்ளர்கள்.

அதில் ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான திலீப் என்பவரும், மற்றொருவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள புது மந்து பகுதியைச் சேர்ந்த 43 வயதான யூசுப் என்பதும்    தெரியவந்துள்ளது.மேலும் இவர்கள் இருவரும் ஊட்டி ,கோவை, திருப்பூர் போன்ற பல்வேறு இடங்களில் திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நகை திருடப்பட்ட  12 மணி நேரத்திற்குள் திருடர்களை கைதுசெய்து  நகையை  மீட்ட போலீசாருக்கு  உயர் அதிகாரிகள் தங்கள் பாராட்டை  தெரிவித்தனர் .

 

 

 

 

 

Categories

Tech |