Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மூதாட்டியின் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… இளைஞர் கைது…!!

மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நடித்த பக்கத்துவீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள ராசிபாளையம் நேருநகரில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாராயி வீடு வெகு நேரமாக மூடி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனாலும் கதவு திறக்கபடததால் சந்தேகமடைந்த அவர்கள் மூதாட்டியின் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற கணேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாராயி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உடனடியாக மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சேகர், செல்லபாண்டியன், துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்டர் காளிதாசிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குபிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணம் இருப்பதால் அதனை திருட திட்டம்போட்ட காளிதாஸ் சம்பவத்தன்று இரவு மாராயி வீட்டிற்கு சென்று பணத்தை திருட முயன்றுள்ளார்.

அப்போது மூதாட்டி சத்தம் கேட்டு விழித்து கொண்டதால் காளிதாஸ் மாட்டிக்கொள்ள கூடாது என அங்கிருந்தத கல்லால் அவரை தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். மேலும் ஒரு துணியால் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் காளிதாஸ் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |