Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கற்பழித்தேன்” இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை பகுதியில் முகமது கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசிர் அலி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவி அசன் பீவி மற்றும் பாட்டியான சைத்தூன் பீவி(70) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி பக்ரீத் பெருநாளில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அசன் பீவி கோபித்து கொண்டு தென்காசியில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து காசிர் அலி ஒரு அறையிலும், பாட்டி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் காலை மூதாட்டி நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தலையில் பலத்த காயத்துடன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் காசிர் அலி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காசிர் அலியின் நண்பரான முகமது காசிம்(20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது முகமது காசிம், காசிர் அலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த 10- ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்த சைத்தூன் பீதியை முகமது காசிம் வெளியே தூக்கி வந்து கற்பழித்துள்ளார்.

அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்தால் காசிர் அலி வெளியே யாரிடமும் கூறி விடுவாரோ என்ற அச்சத்தில் முகமது காசிம் அவரது தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து போலீசார் முகமது காசிமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |