மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற நாகராஜை கைது செய்தார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.