Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மூதாட்டி அளித்த புகார்…. 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டி வீட்டில் 2 லட்சம்ரூபாய் பணத்தை  திருடிச் சென்ற குற்றத்திற்காக 14வயது  சிறுவனை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர்.

திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து தம்பதியினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப்புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய  விசாரணையில்  அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் மூதாட்டியின்  வீட்டில் கொள்ளையடித்து  சென்றது உறுதியானது.இதையடுத்து காவல்துறையினர்  அச்சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |