Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வெளியே போனவங்கள காணும் …. கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்… போலீஸ் விசாரணை..!!

காணமல் போன மூதாட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் சுசீலா (வயது 65) என்பவர் வசித்து வந்தார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுசிலா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர் . ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொருக்கதாங்களில் உள்ள  கிணற்றில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினர் கிணற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்டதில் தெரியவந்தது அவர் மாயமான சுசீலா என்று. மேலும்  இதுகுறித்து காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |