மிகப் பெரிய பொதுத்துறை வங்கி ஆன பாரத ஸ்டேட் வங்கி ரூபாய். 2 கோடிக்குக் குறைவான பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்குரிய வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த புது விகிதங்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அதிகரிப்பால் மூத்தகுடிமக்களுக்கு அதிக நன்மைகளானது கிடைக்கப்போகிறது. அவர்களுக்கு அதிகபட்சம் 7.65 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும். SBI மூத்தகுடிமக்களின் 5-10 வருடங்கள் வரையிலான எப்டி-களுக்கு அதிகபட்சம் 6.65% வட்டிவிகிதத்தை தருகிறது.
முன்னதாக இந்த விகிதம் 6.45 சதவீதம் ஆக இருந்தது. 3-5 வருடங்களுக்கு குறைவான கால அளவுள்ள கணக்குகளுக்கு 6.3 சதவீத வட்டி விகிதமும், 2- 3 ஆண்டுகளுக்கு குறைவான கால அளவுள்ள கணக்குகளுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. அத்துடன் மூத்தகுடிமக்களுக்கு 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான கணக்குகளுக்கு 5.20 சதவீத விகிதமும், 180- 210 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு முறையே 5.10% மற்றும் 5.05% விகிதத்தையும், 46-179 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு 4.5% விகிதத்தையும், 7 -45 நாட்கள் வரையிலான கணக்குகளுக்கு 3.40% விகிதத்தையும் வழங்குகிறது.
அனைத்து மூத்தகுடிமக்கள், 60 வயது மற்றும் அதற்கு அதிகமான SBI ஓய்வூதியதாரர்களுக்கும், குடியுரிமை பெற்ற இந்திய மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து தவணைகளுக்கும் 0.50 சதவீத விகிதம் அதிகமாக இருக்கும் என வங்கி தெரிவித்து உள்ளது. ஆகையால் SBI ஓய்வூதியம் பெறும் மூத்தகுடிமக்களின் 5 வருடங்கள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான கணக்குகளுக்கு அதிகபட்சம் 7.65% (6.65% + 1%) வட்டிவிகிதம் பெறுவார்கள். என்ஆர்ஓ டெபாசிட்டுக்கு இந்த கூடுதல் 1 சதவீத வட்டி கிடையாது. பொது பிரிவினரின் ரூபாய்.2 கோடிக்கும் குறைவான எப்டிக்கு 3% -5.85% வரையிலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்துடன் SBI வங்கியானது மூத்தகுடிமக்களுக்கான சிறப்பு ‘எஸ்பிஐ வீகேர்” டெபாசிட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவற்றில் 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் பிரீமியமாக வழங்கப்படும்.