மூத்தோருக்கான தடகளப் போட்டியில் சேலத்தை சேர்ந்த முதியவர் தங்கம் வென்றுள்ளார்.
மதுரை நாகமலையில் 29 -வது மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பலர் கலந்து கொண்டு ஓடினார்கள். இதில் 75 வயதான சேலத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் கலந்து கொண்டு ஓடினார். அவர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து வருகிற 27-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.