நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ்(82) நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அவருடைய உயிரை காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுகில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சியின் நிறுவரன இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது நாடாளுமன்ற மக்களவை எம்பி ஆகவும் உள்ளார்.