பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி தருகின்றது. மூத்த குடி மக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் பெறுவதற்கு ஏதுவாக சிறந்த திட்டமாக நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி பேங்க் வங்கி கணக்கு மூத்த குடிமகன்களுக்கு கூடுதல் வட்டி தருகின்றது. மூத்த குடிமக்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக எந்த வங்கியில் அதிக வட்டி கிடைக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பெரிய வங்கிகளை விட சிறு நிறுவனங்களிலும் அதிக வட்டி கிடைக்கின்றது.
மூன்று ஆண்டுகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி எந்த வங்கியில் அதிகமாக கிடைக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமகன்களுக்கு 7.25 சதவீதம் வட்டி கிடைக்கின்றது.ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இவ்வங்கியில் 6.5 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும். இந்த வங்கியில் நீங்கள் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு 1.24 லட்சம் வரை கிடைக்கும். டிபிசி வங்கியில் மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வங்கிகளில் முதலீடு செய்தீர்கள் என்றால் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளில் 1.23 லட்சம் கிடைக்கும். குறைந்தபட்சம் பத்தாயிரம் முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 6.80 சதவீதமும், ஆர்.பி.எல். வங்கியில் 6.80 சதவீதமும் வட்டி கிடைக்கிறது.