அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 ஓய்வு விதமாக பெற்று பலனடைய முடிகிறது. மேலும் இந்த திட்டத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை வழங்கி வருகிறது.
60 வயது ஆனவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் மார்ச் 31, 2023 ஆம் தேதி வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் இந்த திட்டம் முடிவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. இந்த திட்டத்தில் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதில் முதலீட்டாளர்கள் பணத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் செலுத்திக் கொள்ளலாம். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கபடும். PMVVY திட்டத்தில் நீங்கள் மாதம் தோறும் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் செலுத்தினால் உங்களுக்கு மாதந்தோறும் அதிகப்பட்சமாக ஓய்வூதியம் 9,250 கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 1,62,162 காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074 அரையாண்டு ஓய்வூதியம் மற்றும் 1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் 1,56,658 இந்த திட்டத்தின் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 15 லட்சம் காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933 அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதம் மாதம் தோறும் 7.40% ஆக இருக்கும்.