2021 -22ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஜூலை 31 ஆகும். எனவே அனைத்து சீனியர் சிட்டிசன்களுமே வருமானவரி தாக்கல் செய்ய வேண்டுமா என்று குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களில் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது 75 வயதை தாண்டி சீனியர் சிட்டிசன்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய தேவை கிடையாது என்று 2021 பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் சிக்கும் 75 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் வருமானம் மற்றும் வட்டி வருமானம் தவிர வேறு எந்த வருமானமும் இருக்கக்கூடாது. பென்சனம் வட்டி வருமானம் இரண்டும் ஒரே வங்கி வழியாக பெற வேண்டும். இந்த தகுதிகளை உடையவர்கள் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை.