தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி மூத்த குடிமக்களை கௌரவிக்கும் விதமாக இந்திய தபால் துறை சார்பாக சிறப்பு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை தபால் நிலைய அதிகாரி மணிமேகலை தலைமை தாங்க நாகை கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பித்து வைத்து மரக்கன்றுகளை கொடுத்தார்.
இம்முகாமில் திருவாரூர் வர்த்தக சங்க பொதுச் செயலாளர் குமரேசன், தபால் துறை ஓய்வு பெற்ற அலுவலர்களான கருணாநிதி, கலையரசி, கணினி மேற்பார்வையாளர் தங்கவேல், ரயில்வே ஓய்வூதியர் சங்கத் தலைவர் தனசேகர், தபால் அலுவலர்கள் சரஸ்வதி, கவிதா. மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.