யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்பட கலைஞருமான டி.குமார் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகி டி.குமார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டு பத்திரிகை துறை நண்பர்களுக்கும், டி.குமார் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.