மூத்த பாலிவுட் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மூளை பக்கவாதம் ஏற்பட்டதால், உடல் அசைக்க முடியாத நிலையில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி அவருக்கு திடீரென மூச்சு திணறலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,நேற்று இரவு 10.15 மணிக்கு அவர் காலமானார்.
Categories