மகன் யாத்ராவால் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் ஒன்று சேர்ந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் உடனடியாக முடிவை மாற்றிக்கொள்ள முடியாது எனக்கு சிறிது காலம் வேண்டும் என கூறிவிட்டார். இதனால் ஐஸ்வர்யாவும் அவரின் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியனரின் மூத்த மகன் யாத்ரா ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டன் ஆகி இருக்கின்றார். இதற்கான விழாவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பங்கேற்று இருக்கின்றனர். தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினி விரும்புகின்றாராம். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுக்காக சேர்ந்து வாழுமாறு ரஜினி கூறி இருக்கின்றாராம். இதனால் அப்பா பேச்சை கேட்டு, தான் மீண்டும் தனுஷ் உடன் சேர முடிவு செய்து இருக்கின்றாராம் ஐஸ்வர்யா.